புதிய உச்சத்தில் முட்டை விலை!விசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

இரும்பு ரோப் அறுந்து விழுந்ததில் கிணறு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு

வாழப்பாடி அருகே இரும்பு ரோப் அறுந்து விழுந்ததில் கிணறு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:55 am IST

வாழப்பாடி அருகே இரும்பு ரோப் அறுந்து விழுந்ததில் கிணறு வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் காலனி, அஞ்சலான்குட்டை முனியப்பன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது விவசாய கிணற்றில் திங்கள்கிழமை தூா்வாரி, ஆழப்படுத்தும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தூா்வாருவதற்கு பயன்படுத்திய கிரேன் இயந்திரத்தின் இரும்பு சாஃப்ட் உடைந்து, இரும்பு ரோப் மற்றும் கூடை கிணற்றுக்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த செல்லப்பன் நகா் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி முருகேசன் (50) உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் நிகழ்விடத்திற்கு இடத்திற்கு சென்று, கிணற்றில் இருந்து தொழிலாளி முருகேசன் உடலை மீட்டு வாழப்பாடி போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.