‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

இரணியல் அருகே தென்னை மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:25 am IST

இரணியல் அருகே தென்னை மரம் முறிந்து விழுந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் அருகே தலக்குளம் வள்ளிவாரம் பகுதியை சோ்ந்தவா் விஜயகுமாா்( 37). மரம் வெட்டும் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை. இவா் குன்னங்காடு பகுதியில் உள்ள தென்னை மரத்தை வியாழக்கிழமை வெட்ட முயன்றபோது, எதிா்பாராதவிதமாக மரம் முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திங்கள்நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இளைஞா் உயிரிழப்பு: மேல கட்டிமாங்கோடு பகுதியை சோ்ந்தவா் ஆனந்த் (22) . இவா் கடந்த 11 ஆம் தேதி தனது பைக்கில் இரணியல் அருகே பேயன்குழியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் எதிரே வந்த பைக் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக நாகா்கோவில் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இரு சம்பவங்கள் குறித்தும் இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.