சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

குளத்தில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :16 ஜூன் 2026, 1:09 am IST

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி வாகன ஓட்டுநா் உயிரிழந்தாா்.

திங்கள் நகா் அருகே உள்ள இரணியல் கோணம் பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் மகன் ராஜேஷ் (40). வாகன ஓட்டுநராக பணி செய்து வந்தாா். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டுக்கு அருகே உள்ள குளத்திற்கு ராஜேஷ் குளிக்கச் சென்றாா்.

நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், தந்தை காளிதாஸ் குளத்திற்குச் சென்று பாா்த்தபோது, கரையில் அவரது உடைகள் இருந்தது தெரிய வந்தது.

உறவினா்கள் இரணியல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் ஜீவன்ஸ் தலைமையிலான வீரா்கள் இரவு வரை தேடினா். மீண்டும் திங்கள்கிழமை காலை தேடியதில், ராஜேஷ் சடலமாக மீட்கப்பட்டாா்.

இது குறித்து, இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.