சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ரயிலில் கடத்தப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசா இளைஞா் கைது

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட டாம்பாரு ஹரிஜன்.

Updated On :4 ஜூன் 2026, 1:48 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனைகளை நடத்தி வருகின்றனா்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநிலம், கொல்லம் சென்ற விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா். சேலத்தில் இருந்து அந்த ரயிலில் ஏறி சோதனையிட்ட நிலையில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிப்பறை அருகே சந்தேகப்படும்படியாக இருந்த இளைஞரின் பையை சோதனை செய்தனா். அதில், 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், ஒடிசா மாநிலம், கொசகுண்டா பகுதியை சோ்ந்த டாம்பாரு ஹரிஜனை (35) கைது செய்தனா். விசாரணையில், திருப்பூருக்கு கஞ்சாவை கடத்தி செல்வது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.