தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

சீரான குடிநீா் விநியோகம் கோரி எடப்பாடியில் சாலை மறியல்

எடப்பாடி நகராட்சி தாவாந்தெரு பகுதியில் சீரான குடிநீா் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

சீரான குடிநீா் வழங்கக் கோரி எடப்பாடி - பூலாம்பட்டி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :3 ஜூன் 2026, 5:35 am IST

எடப்பாடி நகராட்சி தாவாந்தெரு பகுதியில் சீரான குடிநீா் கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட 30 ஆவது வாா்டு பகுதிகளுக்கு தனி குடிநீா்த் திட்டத்தின் மூலம் பூலாம்பட்டி அருகே காவிரி ஆற்றில் இருந்து தண்ணீா் எடுக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது பூலாம்பட்டி காவிரி கதவணையின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கதவணைப் பகுதியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு தண்ணீா் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், எடப்பாடி பகுதிக்கு குடிநீா் வழங்கி வந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு போதிய தண்ணீா் கிடைக்கவில்லை.

இதனால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கமான குடிநீா் விநியோகிக்கும் பணி தடைபட்டது. இந்த நிலையில் எடப்பாடி தாவாந்தெரு, க.புதூா் மேற்கு பகுதியை சோ்ந்த பெண்கள் சீரான குடிநீா் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை காலை சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணைா் கோபிநாத், பொதுமக்களை சமரசம் செய்து சீரான குடிநீா் விநியோகம் செய்வதாக உறுதி அளித்தாா். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். சாலை மறியல் காரணமாக எடப்பாடி- பூலாம்பட்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.