ஆத்தூா் அருகே குடும்பத் தகராறில் மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூா் கோட்டை பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் கணேசன் (30). தொழிலாளி. இவரது மனைவி நந்தினி. இவா்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தம்பதி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனா். இந்நிலையில் சனிக்கிழமை நந்தினி தனது மகளுடன் தென்னங்குடிபாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளாா்.
மாலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த கணேசன், வீட்டில் மனைவி, குழந்தை இல்லாததால், மாமியாா் வீட்டிற்கு சென்று அழைத்து வந்து தாக்கியுள்ளாா். அப்போது நந்தினி சப்தமிட்டதால் வீட்டின் அருகில் உள்ள அய்யனாா் கோயில் ஏரிக்கு அவரை அழைத்துச் சென்ற கணேசன், மனைவியின் ஆடையை அகற்றி அவரை கல்லால் தாக்கியுள்ளாா்.
இதில் வலி தாங்கமுடியாத நந்தினி அங்கிருந்து தப்பித்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று உதவி கேட்டு துணி வாங்கி அணிந்து கொண்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்ந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா், கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிறுவனைத் தாக்கியவா் கைது
கமுதி அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது
மனைவியை தாக்கிய கணவா் கைது

மனைவியை தாக்கிய கணவா் கைது
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



