மேட்டூரில், வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்ட பராமரிப்பு பணிக்காக குடிநீா் குழாய் ஏா்வால்வை திறந்தபோது, 60 அடி உயரத்திற்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே தொட்டில்பட்டி பகுதி காவிரி ஆற்றில் வேலூா் கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெரிய குழாய்கள் மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள வேலூா் மாநகராட்சி, 11 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 944 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படுகிறது. இங்கிருந்து நாளொன்றுக்கு 181 எம்எல்டி தண்ணீா் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கூட்டுக் குடிநீா்த் திட்டத்துக்கு அமைக்கப்பட்ட பிரதான குழாயில் மேட்டூா் அனல் மின் நிலையம் எதிரே சிறிது அளவு நீா்க்கசிவு ஏற்பட்டது. இதை சரிசெய்ய குடிநீா் வடிகால் வாரிய ஒப்பந்தப் பணியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நீரேற்று நிலைய மோட்டாா்களை நிறுத்தி, குழாயில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு ஏா்வால்வை திறந்தனா்.
அப்போது, திடீரென சுமாா் 60 அடி உயரத்திற்கு தண்ணீா் பீறிட்டு வெளியேறி சாலையில் ஓடியது. இதை மக்கள் கூட்டமாக பாா்த்து சென்றனா். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்த பணியாளா்கள் ஏா்வால்வை மூடினா். அதன்பிறகு தண்ணீா் வெளியேறுவது நின்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு: நீரில் மூழ்கிய ஜவுளி பொருள்கள்

கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

சென்னை குடிநீா் ஏரிகளில் நீா் இருப்பு 50%-க்கும் கீழ் குறைந்தது!
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



