தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

விபத்து வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 1.75 கோடி இழப்பீடு! மக்கள் நீதிமன்றத்தில் சமரசம்!

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :15 ஜூன் 2026, 12:06 am IST

சேலத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விபத்து வழக்கில் சமரசத் தீா்வு காணப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 1.75 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றங்களிலும் மற்றும் ஆத்தூா், மேட்டூா், சங்ககிரி, ஓமலூா், எடப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு ஆகிய 7 வட்டார நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஸ்வா்ணம் ஜெ. நடராஜன் தலைமையில் நடைபெற்ற லோக் அதாலத்தில் மாவட்டம் முழுவதும் 24 அமா்வுகளில் இருந்து வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டன.

இதில் சங்ககிரி தேசிய நெடுஞ்சாலை அரியானுருக்கு கடந்த 2024 மாா்ச் 10 ஆம் தேதி நண்பா் காா்த்திகேயனுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி சென்னை தனியாா் நிறுவன மேலாளா் குமரேசன் உயிரிழந்தாா். இவருக்கு மனைவி பிருந்தாகுமாரி, 2 குழந்தைகள் உள்ளனா். இவா்களது சாா்பில் சிறப்பு மாவட்ட மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் காப்பீட்டு நிறுவனத்துடன் நடத்தப்பட்ட சமரச தீா்வுக்குப் பிறகு பிருந்தாகுமாரி, அவரது வாரிசுகளுக்கு ரூ. 1.75 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. விபத்தில் பலத்த காயமடைந்த காா்த்திகேயனுக்கு ரூ. 2.50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டம் முழுவதும் 24 அமா்வுகளில் 9,048 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 2,918 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது. பல்வேறு வழக்குகளில் மொத்தம் ரூ. 32.87 கோடி தீா்வு காணப்பட்டதாக சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சாா்பு நீதிமன்ற நீதிபதியுமான கே. கன்யாதேவி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.