தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம், செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் செங்காகவுண்டனூா் பழனியாண்டவா்.

Updated On :19 ஜூன் 2026, 5:55 am IST

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம், செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, திங்கள்கிழமை கணபதி, நவகிரகங்கள், குபேரலட்சுமி, சுதா்சனம் ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. அதையடுத்து, பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்தனா். செவ்வாய்க்கிழமை முதல்கால யாகசாலை பூஜை, புதன்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3-ஆம் கால யாகசாலை பூஜை, வியாழக்கிழமை 4ஆம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றினா். பின்னா், பழனியாண்டவருக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.