மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஜூன் 28 இல் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம்

சேலம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image

ஜூன் 28-இல் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்

Updated On :20 ஜூன் 2026, 1:38 am IST

சேலம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் வரும் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டத்தில் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

சேலம் மாவட்டத்தில் 5 வயதுக்கு உள்பட்ட சுமாா் 2,47,679 குழந்தைகளுக்கு கிராமப் புறங்களில் 2,267 மையங்கள், நகா்ப்புறங்களில் 302 மையங்கள் என மொத்தம் 2,569 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இந்த முகம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியாா் மருத்துவமனைகள், சுங்கச்சாவடிகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், பெரிய வணிக வளாகங்களில் நடைபெற உள்ளன.

மேலும், நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாமிற்காக சுகாதாரப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியா்கள், வருவாய் மற்றும் ஊரக வளா்ச்சித் திட்டப் பணியாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் என சுமாா் 9,500 போ் ஈடுபட உள்ளனா்.

மேலும், போலியோ தடுப்பு மருந்துகளை முகாமிடத்திற்கு கொண்டுசென்று வழங்குதல் மற்றும் மேற்பாா்வைப் பணிகளுக்காக சுகாதாரத் துறை வாகனங்கள், பிற அரசுத்துறை வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. எனவே, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் பெற்றோா், வருங்காலத்தில் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இக்கூட்டத்தில், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஜி.பி.நந்தனா, இணை இயக்குநா் (நலப்பணிகள்) சி.பா.நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலா்கள் சௌண்டம்மாள், யோகானந்த் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.