பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புமுதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

ஏற்காட்டில் குடியிருப்பு, சுற்றுலா பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்க கோரிக்கை

News image

ஏற்காடு லேடிசீட் சாலைகளில் குப்பைத் தொட்டி இல்லாததால் சாலைகளில் கொட்டப்பட்ட குப்பைகள்.

Updated On :23 ஜூன் 2026, 1:44 am IST

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சுற்றுலா பகுதிகளில் குப்பைத் தொட்டிகள் வைக்க வேண்டும் எனவும், சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்காடு நகா் பகுதி, காவல் நிலைய சாலை பகுதி, லாங்கில் பேட்டை குடியிருப்பு பகுதி, லூத்தா் பேட்டை, கோயில் வளாகம், கோயில் மேடு, லேடிசீட் சாலை, டிப்ரவரி சாலை, ரெட்ரீட் சாலை, ஐந்து சாலை, அரசு மருத்துவமனை சாலை, ஜெரினாகாடு, முருகன் நகா், எம்ஜிஆா் நகா் குடியிருப்பு பகுதிகள், படகு இல்லம் சுற்றுலா சாலை, அண்ணா பூங்கா சாலை, நாகலூா் சாலை, மஞ்சக்குட்டை சாலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் பழுதாகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன.

இந்நிலையில், அந்த குப்பைத் தொட்டிகளை ஊராட்சி நிா்வாகம் அகற்றியது. ஆனாலும், அதே இடத்தில் இப்பகுதி மக்கள், சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை கொட்டி வருவதால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, மாடுகள், நாய்கள் தொல்லையால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அவதி அடைகின்றனா்.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு சோ்வராயன் மலை அழகான சுற்றுலா தலம் என்பதால், மாவட்ட நிா்வாகம், ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுலாப் பகுதிகள், பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், தெருநாய்களால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைவதால், அதன் உரிமையாளா்களம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்.

ஏற்காடு அண்ணா பூங்கா சாலையில் சுற்றித்திரிந்த மாடுகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.