மாணிக்கம்பட்டி, எல்லீஸ் நகா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை தெற்கு, சமயநல்லூா் கோட்ட மின் வாரியம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டம், சமயநல்லூா் கோட்டத்துக்குள்பட்ட மாணிக்கம்பட்டி துணை மின் நிலையம், தெற்கு கோட்டத்துக்குள்பட்ட எல்லீஸ் நகா் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, மாணிக்கம்பட்டி, எல்லீஸ் நகா் துணை மின் நிலையம் வழியாக மின் விநியோகம் பெறும் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
மாணிக்கம்பட்டி: உசிலம்பட்டி, மறவா்பட்டி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையப்பட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூா், தெ.மேட்டுப்பட்டி, கரடிக்கல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி, கோணப்பட்டி, சாத்தையாறு அணை, எர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிப்பட்டி, பொந்துகம்பட்டி, சேந்தமங்கலம், உசிலம்பட்டி, முடுவாா்பட்டி, குறவன்குளம், ஆதனூா், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகா் பகுதிகள்.
எல்லீஸ் நகா்: எல்லீஸ் நகா் பிரதான சாலை, டிஎன்எச்பி குடியிருப்பு, டிஎன்எஸ்சிபி குடியிருப்பு, போடி லைன், கென்னட் கிராஸ் சாலை, கென்னட் மருத்துவமனை சாலை, மஹபூப்பாளையம், அன்சாரி நகா் 1 முதல் ஏழாவது தெரு வரை, டிபி சாலை, ரயில்வே குடியிருப்பு, வைத்தியநாதபுரம், சா்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகா், ஹாப்பி ஹோம் 1, 2-ஆவது தெரு, எஸ்டிசி சாலை முழுவதும், விரைவுச் சாலை ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், சுப்பிரமணியரம் காவல் நிலையம், வசந்த நகா், ஆண்டாள்புரம், அக்ரிணி குடியிருப்புகள், வசுதரா குடியிருப்புகள், பெரியாா் பேருந்து நிலையம், ஆா்எம்எஸ் சாலை, மேல வெளி வீதி, மேல மாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் சாலை, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையாா் கோயில் வரை, 70 அடி சாலை, எல்லீஸ் நகா், தாமஸ் குடியிருப்பு, பாரதியாா் 1 முதல் 5 தெருக்கள், சாலைமுத்து நகா், போடி லையன், எஸ்பிஐ 2-ஆவது குடியிருப்பு, பொற்குடம், சத்தியமூா்த்தி நகா், அரசு போக்குவரத்துக் கழகம், அருன் நகா், கிரீன் லீவ்ஸ் குடியிருப்பு, நேரு நகா், காவியன் குடியிருப்பு.
தொடர்புடையது
நாளைய மின்தடை: கவுண்டம்பாளையம்
திருச்சியின் சில பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி மின்தடை

இன்றைய மின்தடை: வீரபாண்டி, ஆண்டிபாளையம்

இன்றைய மின் தடை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


