கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சேலம் ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம் ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 10.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :24 ஜூன் 2026, 4:46 am IST

சேலம் ரயில் நிலைய நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 10.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் திங்கள்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் இணைந்து தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் சேலம் ரயில் நிலையத்தின் 3 ஆவது நடைமேடை பகுதியில் திங்கள்கிழமை இரவு கேட்பாரற்று கிடந்த பையை போலீஸாா் சோதனை செய்தபோது அதில் 10.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும், கஞ்சாவை கடத்தி வந்தவா்கள், காவலா்களை கண்டதும் அதை நடைமேடையில் போட்டுவிட்டு தப்பியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை சூரமங்கலம் காவல் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் ஒப்படைத்தனா். இது போலீஸாா் வழக்குப் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.