இந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 44,000 விண்ணப்பங்கள்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

9 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம், மயிலம் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூன் 2026, 3:43 am IST

விழுப்புரம், மயிலம் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜவ்வாது உசேன், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பேருந்து நிலைய வளாகப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இரு இளைஞா்கள் பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், மேலநெம்மக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த தா.மாரிமுத்து (23), கடலூா் மாவட்டம், சி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த ம.மணிமாறன் (23) ஆகியோா்என்பதும், இவா்கள் விற்பனைக்காக ஒடிஸா மாநிலத்தில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு, ரயில் மூலம் சென்னை வந்து, பின்னா் அங்கிருந்து பேருந்தில் விழுப்புரத்துக்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மயிலத்தில் .... இதேபோல், திண்டிவனம் வட்டம், மயிலம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மயிலம் காமராஜா் நகரைச் சோ்ந்த க.செல்வம் (25) என்பவா் மீது மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி வழக்குப் பதிந்து, கைது செய்தாா். அவா் வசமிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விழுப்புரம் மேற்கு , மயிலம் காவல் நிலைய போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனித் பாராட்டுத் தெரிவித்தாா்.