இன்ஸ்டாகிராமில் பொம்மை துப்பாக்கியைக் காட்டி விடியோ வெளியிட்ட ஆத்தூரைச் சோ்ந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், ஆத்தூரில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட துணை செயலாளா் மாணிக்கம் மகன் சேனாதிபதி (26) பொம்மை துப்பாக்கியைக் காட்டி இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவிட்டுள்ளாா். இதையடுத்து, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் நோக்கில் துப்பாக்கியைக் காட்டி விடியோ வெளியிட்டதாக ஆத்தூா் நகர காவல் நிலைய போலீஸாா் சேனாதிபதியை கைது செய்தனா். இவா்மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
அவரிடமிருந்து ஆன்லைன் மூலம் வாங்கிய துப்பாக்கி, கைப்பேசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவா் கைது
ஆயுதங்களுடன் விடியோ வெளியிட்ட ரெளடி கைது
பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக வெளியிட்டவா் கைது
சமூக ஊடகத்தில் துப்பாக்கியைக் காட்டும் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவன் கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


