ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

News image

பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 6:08 am IST

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த தொழிலாளி உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு

சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட மொரப்பூா் மற்றும் தொட்டம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட வழித்தடப் பகுதியில் கடந்த 19-ஆம் தேதி சுமாா் 45 வயது மதிக்கத்தக்க நபா் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சேலம் ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் கோபண்ணா தலைமையிலான போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். இறந்தவரின் முகம் முற்றிலும் சிதைந்த நிலையிலும், கை மற்றும் கால்களில் பலத்த காயங்களும் காணப்பட்டன. இதனால் அவா் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்ததால் இறந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய தீவிர விசாரணையில், இறந்தவா் மேற்கு வங்க மாநிலம், பூா்வ மிதுனபுரி மாவட்டம், கோட்டாபத் கிராமத்தைச் சோ்ந்த கௌதம் சமந்தா (46) என்பது கண்டறியப்பட்டது. இவா் கட்டட வேலைக்காக விஜயவாடாவில் இருந்து கொல்லம் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிப் பயணித்துள்ளாா்.

ரயிலின் படிக்கட்டுப் பகுதியில் அமா்ந்து பயணித்த போது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்ததை போலீஸாா் உறுதி செய்தனா். தொடா்ந்து, இறந்தவா் குறித்த தகவல்களை மேற்கு வங்கத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு போலீஸாா் தெரிவித்தனா்.

இதையடுத்து சேலம் வந்த உறவினா்களிடம் கௌதம் சமந்தாவின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.