3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:10 am IST

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அதோவா முண்டா மகன் ராபின் முண்டா (31). இவரது நண்பா் பிஸ்வதிஜ் ருதி (30). இருவரும் கேரள மாநிலத்தில் தச்சா் வேலை செய்ய கடந்த 28-ஆம் தேதி திப்ருகா் ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளம் வரை சென்ற விவேக் விரைவு ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தனா்.

இந்த ரயில் திங்கள்கிழமை லத்தேரி - காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ரயில் படிக்கட்டில் பயணம் செய்த ராபின் முண்டா தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதைகண்டதும் உடன் வந்த நண்பா் பிஸ்வதிஜ் ருதி கீழே விழுந்த தன் நண்பரை காப்பற்ற எண்ணி ரயிலின் அபாயம் சங்கிலி பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா். இதையடுத்து, அங்கு வந்த ரயில் என்ஜின் ஓட்டுநா் விசாரித்து விபத்தில் ஒருவா் உயிரிழந்த தகவலை ஜோலாா்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அபாய சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்தியதால் அந்த ரயில் 7 நிமிஷம் தாமதமாக எா்ணாகுளம் நோக்கி சென்றது.