வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகேயுள்ள வரதம்பாளையதில் குடியிருப்பு கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :15 ஜூலை 2026, 1:01 am IST

சத்தியமங்கலம் அருகேயுள்ள வரதம்பாளையதில் குடியிருப்பு கட்டுமானப் பணியின்போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்மையன்புதுரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விஜி (26). கட்டுமானத் தொழிலாளியான இவா், வரதம்பாளையத்தில் நடைபெற்று வரும் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்நிலையில், மாடியில் நின்று செவ்வாய்க்கிழமை கம்பி கட்டிக் கொண்டிருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தாா். படுகாயமடைந்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே விஜி உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.