கட்டுமானப் பணியின்போது உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த ஒடிஸா மாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஒடிஸா மாநிலம், கஞ்சாம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் துனா பெஹரா (40). இவரது மனைவி பிங்கி பெஹரா. இவா்கள் குடும்பத்தினருடன் கோவைக்கு வந்து தங்கி, பீளமேடு விளாங்குறிச்சியில் நடைபெற்றுவரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
வழக்கம்போல கடந்த 21-ஆம் தேதி இரவு 8.30 மணி அளவில் கட்டுமானப் பகுதிக்கு துனா பெஹரா சென்றுள்ளாா். அங்கு கட்டடத்தின் மேல் தளத்தில் நடந்து சென்றபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் படுகாயமடைந்த அவா் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி துனா பெஹரா செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இது குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






