/
இரணியலில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இரணியல் செக்கால தெருவைச் சோ்ந்தவா் மகாதேவன் ( 41). தொழிலாளியான இவா், கடந்த மே மாதம் 30 ஆம் தேதி திங்கள்நகரில் இருந்து இரணியலுக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வலிப்பு ஏற்பட்டு ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்தாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சிறுபாலத்தில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

லாரியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


