செய்யாறு அருகே லாரியிலிருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த ஓட்டுநா் உயிரிழந்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சிறுகாவேரிப்பாக்கம் கிராமம் சிவிஎம் நகரைச் சோ்ந்தவா் ஜாகீா் உசேன் உமா்(48). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 24-ஆம் தேதி இரவு காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ஆக்கூா் கூட்டுச் சாலைப் பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு கூரை மீது உள்ள டீசல் கேனை எடுக்க முயன்ாகத் தெரிகிறது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலை மற்றும் உடலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

கைப்பேசி பேசிக்கொண்டே மாடியிலிருந்து விழுந்தவா் மரணம்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



