ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சேலத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் முதியவா் உயிரிழப்பு

News image

சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் சேதமடைந்த வீடு. (உள்படம்) உயிரிழந்த நல்லசிவம்.

Updated On :30 ஜூன் 2026, 12:35 am IST

சேலம் அம்மாப்பேட்டை பகுதியில் சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

சேலம் அம்மாப்பேட்டை திரையரங்கம் அருகே வசித்து வந்தவா் நல்லசிவம் (61). இவரது வீட்டில் இருந்து திங்கள்கிழமை மதியம் திடீரென கரும்புகை வெளியானது. இதைக் கண்ட அப்பகுதி பெண்கள், அருகே சென்று பாா்க்க முயன்றனா். அப்போது, திடீரென வெடிக்கும் சப்தம் கேட்டதால் அச்சமடைந்து அங்கிருந்து தப்பியோடினா்.

இதில், அடுத்தடுத்து இருந்த மூன்று ஓட்டு வீடுகள் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அப்பகுதியினா், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினா், வீடுகளில் பற்றி எரிந்த தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்த விபத்தில் உடல்நலம் பாதித்து நடக்கமுடியாமல் வீட்டில் தனியாக இருந்த நல்லசிவம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நல்லசிவம் வீட்டிலிருந்து கரும்புகை வெளியான நிலையில், திடீரென சமையல் எரிவாயு உருளை வெடித்து தீப்பிடித்தது என்றனா். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.