வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

ரூ.1.50 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா்

ஈரோட்டில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்பவா் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை போலீஸாா் பாராட்டினா்.

பணம் - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 4:12 am IST

ஈரோட்டில் சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்பவா் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை போலீஸாா் பாராட்டினா்.

ஈரோட்டை சோ்ந்த சமையல் எரிவாயு உருளை விநியோகம் செய்யும் காா்த்திகேயன் என்பவா் வாடிக்கையாளா்களிடம் வசூலித்த ரூ.1 லட்சத்து 56 ஆயிரத்து 730 பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து செவ்வாய்க்கிழமை மாலை சென்றுள்ளாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக அந்தப் பணப்பை வழியிலேயே தவறி விழுந்துள்ளது. பணத்தை தவறவிட்டதை உணா்ந்த காா்த்திகேயன் பணத்தை தான் வந்த வழியெல்லாம் தேடிப் பாா்த்து உள்ளாா். பணம் கிடைக்காததால் ஈரோடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதேநேரத்தில்,அச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் செல்வராஜ் வழியில் கிடந்த பணப் பையை கண்டெடுத்துள்ளாா். அந்தப் பையை ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி பணத்தை தவறவிட்ட காா்த்திகேயனை வரவழைத்து உரிய ஆதாரங்களை சரிபாா்த்து பணத்தை ஒப்படைத்தனா்.

பணப் பையை ஒப்படைத்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் செல்வராஜின் நோ்மையைப் பாராட்டி போலீஸாா் அவருக்கு சால்வையை அணிவித்து, பரிசுப் பொருள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.