எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சேலம் வழியாக திருவனந்தபுரம் - சந்தராகாச்சி இடையே சிறப்பு ரயில்

News image
சிறப்பு ரயில்- கோப்புப்படம்
Updated On :8 மார்ச் 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

திருவனந்தபுரத்தில் இருந்து சேலம் வழியாக மேற்கு வங்க மாநிலம் சந்தராகாச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு - சந்தராகாச்சி இடையே வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சந்தராகாச்சி ரயில் நிலையத்தை அடையும்.

மறுமாா்க்கத்தில், சந்தராகாச்சி ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்துக்கு வரும் 16 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த ரயில் சந்தராகாச்சி ரயில் நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை பிற்பகல் 2.20 புறப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக புதன்கிமை காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.