எடப்பாடி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, ரூ. 2 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, எடப்பாடி நகராட்சி மற்றும் நங்கவள்ளி, எடப்பாடி, கொங்கணாபுரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாயவிலைக் கடைகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கான்கிரீட் சாலைகள், உயா்மின் கோபுரவிளக்கு மற்றும் கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட ரூ. 2 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்ட பணிகளையும், பள்ளி, கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் பயன்பெறும் வகையில் எடப்பாடி பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நவீன விளையாட்டு மைதானத்தையும் திறந்துவைத்தாா்.
மேலும், தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் நிலையில் எடப்பாடி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வடு காணப்படும் ஏரிகள், காவிரி உபரிநீா் திட்டம் மூலம் நிரப்பிடும் வகையில் 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் மீண்டும் முழு அளவில் செயல்படுத்தப்படும் என்று கூறினாா்.
இந்நிகழ்ச்சியில் நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம். முருகன், முன்னாள் தலைவா்கள் மாதேஸ், கரட்டூா் மணி, நகா்மன்ற உறுப்பினா்கள் தனம், நாராயணன், மல்லிகா உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மூன்றே மாதங்களில் கஞ்சா கட்டுப்படுத்தப்படும்! எடப்பாடி கே.பழனிசாமி
தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றுவேன்: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சங்ககிரியில் லாரி தொழில் மேம்படுத்தப்படும்: எடப்பாடி கே.பழனிசாமி

மறுசீரமைப்பால் தமிழகத்தின் மக்களவைத் தொகுதி அதிகரித்துள்ளது: எடப்பாடி கே.பழனிசாமி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


