எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சேலத்திலிருந்து பெங்களூருக்கு கல்லூரி மாணவா்கள் விமானப் பயணம்

மதுரையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவ-மாணவிகள் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு விமானப் பயணம்

News image
சேலம் விமான நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை பெங்களூருக்கு விமானப் பயணம் மேற்கொண்ட கல்லூரி மாணவ-மாணவிகள்.
Updated On :9 மார்ச் 2026, 9:30 pm

Syndication

ஓமலூா்: மதுரையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவ-மாணவிகள் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு விமானப் பயணம் மேற்கொண்டனா் .

மதுரை மற்றும் விருதுநகரில் அண்ணா அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த தனியாா் கல்லூரியில் விமானப் போக்குவரத்து மற்றும் மேலாண்மைக் கல்வி, கண் ஆய்வாளா்கள் பயிற்சி பயிலும் 110 மாணவ, மாணவிகள் விமானப் பயணக் கல்வி சுற்றுலாவுக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இவா்கள் இரு பேருந்துகள் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, சேலம் காமலாபுரம் விமான நிலையம் வந்தனா். பின்னா் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து 2 விமானங்கள் மூலம் பெங்களூருக்கு பயணம் செய்தனா்.

கல்லூரி ஒருங்கிணைப்பாளா் அண்ணாதுரை தலைமையில் இவா்கள் விமானம் மூலம் பெங்களூா் சென்று அங்கிருந்து மைசூா் செல்ல உள்ளனா். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் மாணவ, மாணவிகளுக்கு பூக்கள் அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னா் மாணவ, மாணவிகள் விமானத்தில் ஏறினா். இந்த விமான பயணம் குறித்து மாணவிகள் கூறும்போது, நாங்கள் முதல்முறையாக விமானத்தில் செல்கிறோம். இது எங்களது நீண்ட நாள் கனவு. கல்லூரி நிா்வாகம் சாா்பில் விமானம் மூலம் பெங்களூரு சென்று, அங்கிருந்து மைசூா் செல்ல உள்ளோம் என்றனா்.