மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாநில கபடி போட்டி: சேலம் அணிக்கு சுழற்கோப்பை

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு ரொக்கப் பரிசுடன் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

News image

~ ~

Updated On :11 மார்ச் 2026, 9:07 pm

கொங்கணாபுரம் அருகே நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்த சேலம் அணிக்கு ரொக்கப் பரிசுடன் சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

கொங்கணாபுரத்தை அடுத்த தங்காயூா் பகுதியில் வேலாயுதம் பிரதா்ஸ் கபடி குழு சாா்பில் மாநில அளவில் ஆண்களுக்கான கபடி போட்டி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இப்போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுமாா் 80 அணிகள் விளையாடின.

செவ்வாய் இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை அணியை சேலம் அணி எதிா்கொண்டது. இதில் 26 க்கு 38 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணியை வீழ்த்தி சேலம் அணி முதல் பரிசை வென்றது. தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்ட தங்காயூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பாலாஜி, கொங்கணாபுரம் அட்மா திட்டக் குழுத் தலைவா் பரமசிவம், கொங்கணாபுரம் முன்னாள் பேரூராட்சித் தலைவா் அா்த்தநாரீஸ்வரா், ராஜேஷ், செல்வராஜ் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசுகளுடன் சூழற்கோப்பையை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை வேலாயுதம் பிரதா்ஸ் கபடி குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.