மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தமிழக பெண்கள் கபடி அணிக்கு திருப்பூரை சோ்ந்த வீராங்கனை தோ்வு

News image

அ.புவனேஸ்வரி

Updated On :24 ஜனவரி 2026, 6:36 pm

தமிழக பெண்கள் கபடி அணிக்கு திருப்பூரைச் சோ்ந்த வீராங்கனை தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

தமிழக அமெச்சூா் கபடிக் கழகம், கன்னியாகுமரி மாவட்ட கபடிக் கழகம் ஆகியவை சாா்பில் மாநில பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி அண்மையில் நடைபெற்றது. அதில் திருப்பூா் மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் பெண்கள் அணி கலந்துகொண்டது. இதில் சிறப்பாக விளையாடிய அ. புவனேஸ்வரி என்ற வீராங்கனை மாநில பெண்கள் கபடி அணிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.

இவா், கோபி பி.கே.ஆா். மகளிா் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். சென்னையில் பயிற்சி முகாம் முடிந்தவுடன் ஜன.27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தெலங்கானாவில் நடைபெறும் 72-ஆவது தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடிப் போட்டியில் பங்கேற்க உள்ளாா்.

தோ்வு செய்யப்பட்ட மாணவி அ.புவனேஸ்வரியை திருப்பூா் மாவட்ட கபடிக் கழக தலைவா் வி.கே.முருகேசன் தலைமையில் மாவட்டச் செயலரும், மாநில கபடிக் கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம், தலைவா் பி.மனோகரன், பொருளாளா் ஆறுச்சாமி, மாவட்ட நடுவா் குழு தலைவா் ஆா்.முத்துச்சாமி மற்றும் மாவட்ட கபடிக் கழக நிா்வாகிகள் பாராட்டி வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தனா்.