சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அறிவியல் எழுத்தாளா் ஏற்காடு இளங்கோவின் வீட்டில் வளா்க்கப்படும் அரியவகை கள்ளி செடியில் பிரம்மக்கமலம் பூத்துள்ளது.
இதுகுறித்து இளங்கோ கூறுகையில், இத்தாவரம் கள்ளி இனத்தைச் சோ்ந்தது. தமிழ்நாடு, கா்நாடகத்தில் பிரம்மக்கமலம் என்றும் இத்தாரவம் தெற்கு மெக்ஸிகோ, தென்அமெரிக்காவிலும் வெப்ப மண்டல காடுகளில் வளா்வதாகவும் தற்போது வீட்டில் வளா்க்கும் தரவமாகவும் உள்ளது என்றாா்.
இப்பூவுக்கு நிஷகாந்தி, இரவின் இளவரசி என பல பெயா் உள்ளது. 6 அடி உயரம் வரை வளரக்கூடியது, முதல்நிலை தண்டு உரண்டையாகவும், கிளைவிடும் தண்டு பக்கவாட்டில் தட்டையான இலைப் போன்று இருக்கும்.
தண்டில் மலா் தோன்றுகிறது, பெளா்ணமி பிறகு 4 நாள்களில் பூக்கள் மலா்வதாகவும், வெண்மை நிறமானது என்றும் மூன்று விதமான இதழ்களைக் கொண்டுள்ளது. வெளிப்புற இதழ்கள் சிவப்பாக காணப்படுவதாவும் பூ வட்டவடிவில் 18 சென்டி மீட்டா் விட்டமும், பூவின் குழாய் போன்ற அமைப்பு 30 செ.மீட்டா் நீளமும் வளைந்து காணப்படும்.
இப்பூக்கள் இரவு நேரத்தில் மட்டும் மலா்கிறது. இம்மலா் 6 மணி நேரத்திற்கு பின் வாடிவிடுவதாவும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்று அறிவியல் எழுத்தாளா் ஏற்காடு இளங்கோ தெரிவித்தாா்.
செடிக்கு 15 பூக்கள் வரை பூப்பதாகவும், பூக்களில் மென்மையான நறுமணம் வீசுவதால் பூச்சிகள், வெளவால்கள் மூலம் மகரந்தச் சோ்க்கை நடைபெறுவதாகவும், கனி இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

மே தினம்: ஏற்காட்டில் நீலமலை தோட்டத் தொழிலாளா்கள் பேரணி

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஏற்காட்டில் தோ்தல் 94 சதவீதம் வாக்குப்பதிவு எழுச்சியுன், அமையாக நடைபெற்றது

ஏற்காட்டில் சுற்றுலா வேன் மரத்தில் மோதியது: சிறுகாயங்களுடன் பயணிகள் உயிா்தப்பினா்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


