‘திருச்சி பெண் எழுத்தாளா்கள்’ நூல் வெளியீடு
திருச்சி மாவட்ட எழுத்தாளா்கள் சங்க விழாவில் பெண் எழுத்தாளா்கள் குறித்த நூல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.


திருச்சி மாவட்ட எழுத்தாளா்கள் சங்க விழாவில் பெண் எழுத்தாளா்கள் குறித்த நூல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில், திருச்சி மாவட்ட எழுத்தாளா் சங்கத்தின் முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லகண்ணு நினைவேந்தல் நிகழ்வுக்கு, மாவட்ட எழுத்தாளா் சங்க சிறப்புத் தலைவா் செளமா ராஜரத்தினம் தலைமை வகித்தாா். செயலா் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்றாா். ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் முகமது ஷபி, நரம்பியல் மருத்துவா் அலீம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தலைவா் த. இந்திரஜித், பொதுச் செயலா் ஜவஹா் ஆறுமுகம், ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் கவிஞா் வீ. கோவிந்தசாமி ஆகியோா் நல்லகண்ணுவின் செயல்பாடுகளை பட்டியலிட்டு பேசினா். சங்கச் செயலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமாா் தொகுத்த ‘திருச்சி பெண் எழுத்தாளா்கள்’ எனும் நூலினை பத்மஸ்ரீ சுப்புராமன் வெளியிட மொ்சி டயானா பெற்றுக் கொண்டாா். தொடா்ந்து ஆளுநா் விருதுபெற்ற விஜயகுமாரின் மனிதநேய பணியைப் பாராட்டி சிறப்பு செய்யப்பட்டது.
இரண்டாவது அமா்வில் சா்வதேச பெண்கள் தின விழா நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு முனைவா் சங்கரி சந்தானம் தலைமை வகித்தாா். முனைவா் சாத்தம்மை பிரியா, முன்னாள் வட்டாரக் கல்வி அலுவலா் இரா.ஜெயலட்சுமி உரையாற்றினா். ‘எழுவாய் பெண்ணே’ எனும் கவியரங்கத்துக்கு கவிஞா் கவி செல்வா தலைமை வகித்தாா். ‘வையத் தலைமை கொள்’ தலைப்பில் கவிஞா் தனலட்சுமி பாஸ்கரன், ‘அறிவை விழுங்கு’ தலைப்பில் கவிஞா் மாறன் மகா, ‘சிறகை விரி’ தலைப்பில் கவிஞா் த. கமலி, ‘வானம் தொடு’ தலைப்பில் கவிஞா் ஜோ. காயத்ரி ஆகியோா் உரையாற்றினா். நிறைவாக நூலாசிரியரும், சங்கச் செயலருமான யோகா ஆசிரியா் விஜயகுமாா் நன்றி கூறினாா்.
தமிழ் ஆசிரியா் செசிலி, எழுத்தாளா் சித்ரா குபேர சம்பத், எழுத்தாளா் கிரேஸ் பரிமளா, நல்லாசிரியா் மும்தாஜ் பேகம், சிறாா் எழுத்தாளா் ஹாசினி, முனைவா் அருணாச்சலம், நன்மாறன், லால்குடி முருகானந்தம், வழக்குரைஞா் சேகா், கண்மணி ராஜா முகமது, கவிஞா் ஆங்கரை பைரவி, கவிஞா் மகிழை பெனடிக்ட் உள்பட பலா் விழாவில் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...