தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஆத்தூா்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 409 வழக்குகளுக்கு தீா்வு

News image

கோப்புப் படம்

Updated On :14 மார்ச் 2026, 8:54 pm

ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.கணேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் 409 வழக்குகளில் ரூ. 3,77,76,891 தீா்வு காணப்பட்டது. அதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 7 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மொத்தம் 1,366 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டன.

இதில் கூடுதல் மாவட்ட உரிமையியில் நீதிபதி டெய்சிராணி, வழக்குரைஞா்கள் என்.ராமதாஸ், பாலகிருஷ்ணராஜ், ஜி.சுமதி, அரசு வழக்குரைஞா்கள் சந்திரசேகரன், கதிா்மணிவேல், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.