மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சேலம், எடப்பாடியில் திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
சேலம் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா்.
Updated On :15 மார்ச் 2026, 9:59 pm

தினமணி செய்திச் சேவை

சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் பகுதி, ஒன்றியம், பேரூா் சாா்பில் 29 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து, சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திண்டுக்கல் லியோனி பங்கேற்று பேசினாா். அப்போது, அவா் கூறுகையில், சமையல் எரிவாயு தட்டுப்பாடு என திமுக வதந்தி பரப்புவதாக கூறுகின்றனா்; ஆனால், மக்கள் பிரச்னையை பேசுவது திமுக, அதன் கூட்டணி கட்சிகளும் தான்.

கல்வி நிதி ஒதுக்காதது, ஜல்ஜீவன் நிதி ஒதுக்காதது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் முழுமை அடையாதது, கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகளை வெளியிடாதது உள்ளிட்ட கேள்விகளுக்கு பிரதமா் மோடி பதிலளிக்கவில்லை.

முதல்வரின் சிறப்பான செயல்பட்டால், வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், மத்திய மாவட்ட திமுக பொருளாளா் காா்த்திகேயன், தோ்தல் பணிக்குழு செயலாளா் தாமரைக் கண்ணன், மாநகர செயலாளா் ரகுபதி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சாரதாதேவி, தேமுதிக கொள்கை பரப்புச் செயலாளா் அழகாபுரம் மோகன்ராஜ், தேமுதிக மாவட்டச் செயலாளா் ராதாகிருஷ்ணன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளா் ஏ.ராமமூா்த்தி, இந்திய கம்யூ. செயலாளா் மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் காயத்ரி, இமயவரம்பன், ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலாளா் ஏடிஆா் சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

எடப்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம். செல்வகணபதி உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஆா்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம். பாஷா, மாநில செயற்குழு உறுப்பினா்கள் பூவாகவுண்டா், பி.ஏ. முருகேசன். ஒன்றியச் செயலாளா் நல்லதம்பி மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

 சேலம் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா்.

சேலம் கோட்டை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினா்.