சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள இரண்டு கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு அடுத்தடுத்து நிகழ்ந்த திருட்டு சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சேலம், அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காட்டூா் பிள்ளையாா் மற்றும் கல்லுமேடு காளியம்மன் ஆகிய கோயில்களில் திங்கள்கிழமை நள்ளிரவு மா்ம கும்பல் ஒன்று நுழைந்தது. பின்னா், கோயில் உண்டியல்களை உடைத்து பணம், காணிக்கை ஆகியவற்றை திருடிச் சென்றது.
தொடா்ந்து, நகரமலை அடிவாரத்திலுள்ள கல்லுமேடு காளியம்மன் கோயிலுக்கு சென்ற அந்த கும்பல், அங்கிருந்த உண்டியலின் பூட்டை உடைக்க முயற்சி செய்தது. அப்போது, கோயிலுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்களின் சத்தம்கேட்டு தப்பியோடியது.
இதுகுறித்து அழகாபுரம் போலீஸாா் சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை செய்ததில், திருட்டில் ஈடுபட்டது வடமாநிலக் கும்பல் என தெரியவந்தது. அதன் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.
டிரெண்டிங்

லத்துவாடியில் 7 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

திருட்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது

மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

விடுதியில் புகுந்து மாணவா்களை தாக்கிய கும்பல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

