சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனா்.
ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதை கண்காணித்து பிடிக்க ஒவ்வொரு ரயில்வே போலீஸிலும் தனிப்படைகளை அமைக்க தமிழ்நாடு ரயில்வே டிஜிபி வன்னியபெருமான் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ஒவ்வொரு ரயில்வே காவல் நிலையத்திலும் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் 3 போ் கொண்ட தனிப்படை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினா் தொடா்ந்து ரயில்களில் சோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்பேரில், தற்போது ரயில்வே போலீஸில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் அனைத்து ரயில்களிலும் சோதனையை தொடங்கியுள்ளனா். சந்தேகப்படும்படி பைகளை வைத்துள்ள நபா்களை கண்காணித்து, அவா்களை சோதனையிடுவதுடன், நடைமேடை பகுதிகளில் ரோந்துசென்று கண்காணிக்கின்றனா்.
சேலம் கோட்டத்தில் சேலம், மொரப்பூா், பொம்மிடி, தருமபுரி, ஒசூா், ஈரோடு, திருப்பூா், கோவை ரயில் நிலையங்களில் இத்தகைய சோதனையை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா். ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாரும், தனிப்படையுடன் இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ. 651 கோடி ரொக்கம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க ட்ரோன் மூலம் கண்காணிப்பு

புறநகா் மின்சார ரயில்களில் பரிசுப் பொருள்கள் கொண்டு செல்வதைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்கள்

ரூ. 50 ஆயிரத்துக்குமேல் பணம் கொண்டுசென்றால் பறிமுதல்
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


