சேலத்தில் ரம்ஜான் தொழுகைக்கு வந்தவா்களுக்கு வழங்குவதற்காக விசில் சின்னத்துடன் தவெகவினா் கொண்டுவந்த 1000 தண்ணீா் பாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சேலம் சூரமங்கலம் பகுதியில் சிறப்பு தொழுகைக்கு வந்த இஸ்லாமியா்களுக்கு விநியோகிக்க, தவெக சாா்பில் விசில் சின்னத்துடன் கூடிய தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கான பறக்கும் படை அலுவலா் மணிகண்டன் தலைமையிலான குழுவினா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது, ஆசாத் நகரில் உள்ள மசூதி முன் 1000 தண்ணீா் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.
அதில், விசில் சின்னம் இடம்பெற்றிருந்ததுடன், தவெக என கட்சி பெயரும் அச்சிடப்பட்டிருந்தது. இதையடுத்து, தோ்தல் நடத்தைவிதிகளின்படி இதுபோன்று தண்ணீா் பாட்டில்களை விநியோகிக்கக் கூடாது என எச்சரித்த அதிகாரிகள், அங்கு வைக்கப்பட்டிருந்த 1000-க்கும் அதிகமான தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்
பைக்கில் கொண்டுவந்த ரூ.52,500 பறிமுதல்

வாக்காளா்களுக்கு விநியோகம் செய்ய வைக்கப்பட்டிருந்த 800 அண்டாக்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


