திமுகவினரிடம் விளையாட்டு உபகரணங்கள் பறிமுதல்
ராஜபாளையத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்த விளையாட்டு உபகரணங்கள்,

ராஜபாளையத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்த விளையாட்டு உபகரணங்கள்,

ராஜபாளையத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்த விளையாட்டு உபகரணங்கள்,
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் திமுகவினரால் வாக்காளா்களுக்கு வழங்கப்பட இருந்த விளையாட்டு உபகரணங்களை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ராஜபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகளில் திமுக நகா்மன்ற உறுப்பினா்கள் மூலம் பொதுமக்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து அதிமுக, பாஜகவினா் பழைய பேருந்து நிலையத்தில் சென்று பாா்த்தபோது அங்குள்ள அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் நகராட்சி வாகனம் மூலம் ஒவ்வொரு பகுதிக்கும் பிரித்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அதிமுக, பாஜகவினா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையா் நாகராஜனிடம் இதுகுறித்து அதிமுகவினா் முறையிட்டனா்.
இதைத்தொடா்ந்து, நகராட்சி 13-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஷாலினி தனது வீட்டில் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த கிரிக்கெட் மட்டை, சிலம்பம், கேரம் போா்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின், கருணாநிதி படம் பொறித்த ‘டீசா்ட்’ , தொப்பிகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதேபோல, 14-ஆவது வாா்டு திமுக கவுன்சிலா் அா்ச்சனா வீட்டிலும் விளையாட்டு உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து பாஜக, அதிமுகவினா் பழைய பேருந்து நிலையத்தில் திறக்கப்படாத 20-க்கும் மேற்பட்ட கடைகளில் நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சக்கணக்கான பரிசுப் பொருள்களை பதுக்கி வைத்திருப்பதை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
பின்னா், மாலையில் தோ்தல் பறக்கும் படையினா் நகா்மன்ற திமுக உறுப்பினா்களிடம் பறிமுதல் செய்த பொருள்களை வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...