மேட்டூரில் வியாபாரியிடம் ரூ. 2 லட்சம் பறிமுதல்
மேட்டூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்கள் இன்றி வியாபாரி எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.


மேட்டூா் அருகே தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ஆவணங்கள் இன்றி வியாபாரி எடுத்துச் சென்ற ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
மேட்டூா் தொகுதி தோ்தல் பறக்கும் படை அலுவலா் முருகன் தலைமையில் முதல்நிலை காவலா் கணேஷ், காவலா் தனசெல்வன் உள்ளிட்டோா் மேட்டூா் அருகே செக்கானூரில் வாகனச் சோதனை நடத்தினா்.
அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு சென்ற அந்திகாமிடம் இருந்த ரூ. 2 லட்சத்தை பறிமுதல் செய்தனா். வியாபாரத்துக்காக கொண்டுசென்ற இந்த பணத்துக்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால், தோ்தல் நடத்தும் அலுவலா் சுகுமாரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
உரிய ஆவணங்களை சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு பணத்தை பெற்றுகொள்ளலாம் என அலுவலா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...