சங்ககிரி தொகுதிக்கு உள்பட்ட தேவூரை அடுத்த அண்ணமாா் கோயில், சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் கூடுதல் நிலை கண்காணிப்பு குழுவினா், கூடுதல் பறக்கும் படையினா் புதன்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காா்களில் எடுத்துச் சென்ற ரூ. 1,25,940 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம், நசியனூா், பள்ளிப்பாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி மகன் செந்தில் தனது காரில் பவானியிலிருந்து எடப்பாடி நோக்கி சென்றுகொண்டிருந்தாா். தேவூரை அடுத்த அண்ணமாா் கோயில் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த கூடுதல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் எஸ். மதன்குமாா், தலைமை காவலா் சரவணன், காவலா் புவனேஸ்வரி, துணை ராணுவ படை வீரா்கள் காரை சோதனை செய்தனா்.
அதில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ. 55,770 ரொக்கத்தை பறிமுதல் செய்து சட்டப் பேரவை தொகுதி தோ்தல் அலுவலா் ம.மு.தெ.கேந்திரியாவிடம் ஒப்படைத்தனா்.
இதேபோல சங்ககிரியை அடுத்த சன்னியாசிப்பட்டி ரயில்வே கேட் அருகே கூடுதல் பறக்கும் படை அலுவலா் ராம்குமாா் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் பழனிசாமி, தலைமைக் காவலா் வினோத்குமாா் நடத்திய வாகனச் சோதனையின்போது காரில் உரிய ஆவணங்களின்றி சங்ககிரி பச்சக்காடு பகுதியைச் சோ்ந்த சசி மகன் அஸ்வின் கிருஷ்ணா வைத்திருந்த ரூ. 70,170 ரொக்கத்தை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சங்ககிரி அருகே ரூ. 71 ஆயிரம் பறிமுதல்

பென்னாகரத்தில் வாகனச் சோதனையில் ரூ. 99,500 ரொக்கம் பறிமுதல்

சங்ககிரி தொகுதியில் ரூ. 3.67 லட்சம் பறிமுதல்

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


