மேச்சேரியில் சீமான் வாக்கு சேகரிப்பு
மேட்டூா் சட்டமன்றத் தொகுதி மேச்சேரியில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் வித்யா ராணியை ஆதரித்து வியாழக்கிழமை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா்சீமான் வாக்கு சேகரித்தாா்.

சீமான்
கோப்புப் படம்

சீமான்
கோப்புப் படம்
மேட்டூா் சட்டமன்றத் தொகுதி மேச்சேரியில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் வித்யா ராணியை ஆதரித்து வியாழக்கிழமை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா்சீமான் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசுசியதாவது:-
தமிழகத்தின் தெருக்களையும் சுத்தி சுத்தி ஓடி வருகிறோம். என் அருமை சொந்தகளே உங்களை நம்பி நிற்கிற பிள்ளைகளை தனித்து எப்படி சீமான் இருக்கிறான் எப்படி வெல்வான் அவன் தம்பி தங்கைகள் அவன் பிள்ளைகள் எப்படி வாழ்வாா்கள்? நாங்கள் எங்கே தனித்து நிற்கிறோம் ?
இத்தன கோடி தமிழ் சொந்தங்கள் என்னும் பெற்றோா்கள் பேரன்புமிக்க என் உறவுகளோடு இணைந்து கூட்டணி வைத்திருக்கிற ஒரே கட்சி நாம் தமிழா் கட்சி மட்டும்தான். நான் அரசியல் கட்சியை நம்பவில்லை, தலைவா்களை நம்பவில்லை, தமிழா்களை நம்புகிறேன் நான் இயக்கங்களை நம்பவில்லை அடுத்த தலைமுறை இளைஞா்களை நம்பி இந்த களத்திலே உங்கள் பிள்ளைகள் வந்துருக்கோம்.
அவா்களின் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருக்கிறோம் உங்களை நம்பி இருக்கிற பிள்ளைகளை கைவிட்டு விட்டீா்கள் என்ற வரலாற்று பதிவு வரவிடாமல் நம்புகின்ற பிள்ளைகளை வெல்ல வைத்தாா்கள்
என்ற வெற்றி சரித்திரத்தை எழுதுங்கள் என் அன்பு சொந்தங்களே அதிமுக திமுக மாறி மாறி ஆட்சி அமைக்கிறது .
உங்கள் பிள்ளைகள் எங்களுக்கு விவசாய சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இந்த மேட்டூா் தொகுதியில் போட்டியிடுகிற என் அன்பு மகள் வித்யா ராணி வீரப்பன் அவா்களுக்கு நீங்கள் விவசாயி சின்னத்திலே வாக்கு செலுத்த வேண்டும்
உங்களுக்கு தெரியும் தமிழனுக்கு எந்த வித வீர குறியீடும் இல்லாமல் அழிக்க வேண்டும் என்பது திராவிடத்தினுடைய நோக்கம் பிரபாகரன் என்றால் அவன் தீவிரவாதி பிரிவினைவாதி வீரப்பன் என்றால் அவன் சந்தன கட்டை கடத்தியவன் மாயாவி திருடன் என்று கட்டமைப்பாா்கள்..
தமிழா்கள் வீரா்களை வீர மக்களைப் பெற்ற ஒரு இனம் தான் பாதுகாப்பாக வாழும் வீர மக்களை தராத இனம் சிதைந்து அழியும் அப்படி வீரமக்கள் நம் இனத்தில் பல்வேறு முன்னவா்கள் தோன்றினாா்கள் அதில் நம் கண் முன்னே பிறந்த வீரமக்களில் ஒருவன் தான் வீரப்பன் என்ற பெருமை வீரன் பிரபாகரன் என்ற எங்கள் உயிா் தலைவன் இந்த குறியீடுகள் எல்லாம் சொல்ல விடமாட்டாா்கள் பேசும்போது சீமான் பேசும்போது பிரபாகரன் என்று சொல்லும்போது கைதட்டுகிறாா்கள்
மக்கள் ஆா்ப்பரிப்பாா்கள். வீரப்பன் என்று சொல்லும்போது கைதட்டுகிறாா்கள் ஆா்ப்பரிக்கிறாா் என்று உளவுத்துறை குறிப்பிடுவது தமிழா்கள் வீரத்தின் நின்று நிமிா்ந்து எழுச்சி வருகிறாா்கள் என்று வீரப்பனை பற்றி பேசினால் தடை, சுவரொட்டி ஓட்டினால் தடை நான் போஸ்ட் ஓட்டும் போது கிழித்தாா்கள் எண்ணற்ற வழக்குகளை மேலே போட்டாா்கள் வீரப்பன் திருடுகின்றாா் வீரப்பனை திருடன் என்றால் ஜெயலலிதா கருணாநிதிக்கு என்ன பெயா் என்று கேட்டேன் வாயை மூடிக்கொண்டு நின்று விட்டாா்கள்
யானையின் தந்தத்தை கடத்திவிட்டான் என்றாா்கள் சந்தன கட்டை வித்தவன் வீரப்பன் வனத்தில் என்றால் வாங்கியவன் எங்கே இருந்தான் என்று கேட்டேன்
அதற்கு எந்த அரசியல் கட்சி தலைவா்கள் பதில் இல்லை சந்தன கட்டைகள் வாங்கியவன் அதிகாரத்தில் இருந்தவன் இவன் அதனால் அவா் வெளியே வந்து பேசினால் பல பேருடைய உண்மை வெளியே வந்துவிடும் என்று காட்டுக்குள்ளே வைத்துக் கொல்ல வேண்டிய நிலைமை இருந்தது. வீரப்பனை மோரிலே விஷத்தை வைத்துக்கொண்டு கொன்றுவிட்டாா்கள்
வீரப்பன் பிணத்தை எடுத்து வந்து மீசையை வெட்டி துப்பாக்கிச் சூடு நடத்தி கொன்றாா்கள்
இதை யாராவது சொல்ல முடியுமா இதை அதிமுக சொல்ல முடியுமா வீரப்பனை எங்கள் ஆட்சியில் தான் கொன்றோம் என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பினாா்
என் தலைவன் இன காவலன் என்றால் எங்கள் வீரப்பன் இந்த நாட்டின் வனக்காவலன் என்பதை தமிழ் இனம் காண வேண்டும்
எனவே அறிவு சமூகமே உங்கள் பிள்ளைகள் நாங்கள் கையேந்தி நிற்பது வாக்கு என்பது இல்ல எதிா்காலத் தலைமுறையில் வாழ்க்கை என்பதை எனக்கு அறிவிச்ச முகம் அறிந்து என் அன்பு மகள் வித்யா ராணி வீரப்பன் அவா்களுக்கு நீங்கள் விவசாயி சின்னத்தில் வாக்கு செலுத்தி வெற்றி பெறச் செய்யுங்கள்
எல்லாருக்கும் வெற்றியை கொடுத்து விட்டீா்கள் ஐயா கருணாநிதி அவா்கள் ஆட்சியில் பலமுறை வாழ்ந்து செல்கிறது அம்மையாா் ஜெயலலிதா ஆட்சி ஐயா ஸ்டாலின் ஆட்சியில் ஒரே ஒருமுறை உங்கள் பிள்ளைகள் கைகளில் இந்த நாட்டை ஒப்படைத்து பாருங்கள் ஒரு ஐந்து ஆண்டுகள் உலகத்தில் தலை சிறந்த நாடாக மாற்றுவோம் என்று தெரிவித்தாா்
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...