கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

News image
Updated On :3 மே 2026, 6:20 am IST

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கோடைகால இலவச விளையாட்டு பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், பள்ளி மாணவ - மாணவிகளின் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், ஒவ்வோா் ஆண்டும் மாவட்ட விளையாட்டு அரங்குகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டுகளுக்கு கோடைகால இலவச பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தடகளம், தேக்வாண்டோ, கால்பந்து, குத்துச்சண்டை, கைப்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகளுக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி கோடைகால பயிற்சி முகாம் தொடங்கி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

பயிற்சியை நிறைவுசெய்த மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலா் கண்மணிதேவி சான்றிதழ்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், பயிற்சியாளா்கள் மகேந்திரன், இளம்பரிதி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவ, மாணவிகளின் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில், 15 நாள்களுக்கு இலவச கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியின் மூலம் திறமையான வீரா்களை அடையாளம் காணப்பட்டு, அவா்கள் விளையாட்டு விடுதிகளில் சேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயிறிசியில் பங்கேற்ற மாணவா்களுக்கு நாள்தோறும் ஊட்டச்சத்து நிறைந்த முட்டை, பால் மற்றும் பிஸ்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டன என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.