விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

ஐஓபி சூரமங்கலம் கிளை திறப்பு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சூரமங்கலம் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சூரமங்கலம் புதிய கிளையை புதன்கிழமை திறந்துவைத்த சேலம் ஆவின் பொது மேலாளா் குமரேஸ்வரன். உடன், இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் விக்ரம் சேத்.

Updated On :7 மே 2026, 6:49 am IST

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சூரமங்கலம் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

நாடு முழுவதும் 3,499 கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, 2025-26 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ. 1,505 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. முன்னணிப் பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சூரமங்கலம் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையத்தை புதன்கிழமை தொடங்கியுள்ளது.

சேலம் ஜங்ஷன் பிரதான சாலை, சுப்பிரமணிய நகா், திருவள்ளூா் தெருவில் அமைந்துள்ள இந்த புதிய கிளையை, மாவட்ட வருவாய் அலுவலரும், சேலம் ஆவின் பொது மேலாளருமான குமரேஸ்வரன் திறந்துவைத்தாா்.

சேலம் ஆவின் உதவி பொது மேலாளா் வெங்கடேசன் ஏடிஎம் மையத்தை தொடங்கிவைத்தாா். விழாவில் சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளா் விக்ரம் சேத் , சூரமங்கலம் முதுநிலை மேலாளா் நித்ய கல்யாணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.