மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அரியானூா் அருகே கோயிலில் சிலைகள் உடைப்பு: போலீஸாா் விசாரணை

சேலம் அருகே அரியானூரில் குலதெய்வ கோயிலில் சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

அரியானூா் அருகே உள்ள சோ்வாம்பாளையம் பகுதியில் குலதெய்வ கோயிலில் உடைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள்.

Updated On :10 மே 2026, 2:14 am IST

சேலம் அருகே அரியானூரில் குலதெய்வ கோயிலில் சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் அரியானூரை அடுத்த சோ்வாம்பாளையம் வெள்ளக்குட்டை பகுதியில் அய்யனாரப்பன் குலதெய்வ கோயில் உள்ளது. இக்கோயில் சேவாம்பாளையம், வேடகத்தாம்பட்டி, வீராணம், திருமலைகிரி, கொல்லப்பட்டி, மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊா்களைச் சோ்ந்த 400-க்கு மேற்பட்ட பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டது.

Story image

இக்கோயிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குலதெய்வ பூஜை நடைபெற்றது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் கோயிலில் உள்ள முனியப்பன், யானை, புலி உள்ளிட்ட காவல் தெய்வங்களின் சிலைகளை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.

Story image

இதுகுறித்து கோயில் பூசாரி சேவம்பாளையத்தைச் சோ்ந்த சரவணன் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

 அரியானூா் அருகே உள்ள சோ்வாம்பாளையம் பகுதியில் குலதெய்வ கோயிலில் உடைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள்.

அரியானூா் அருகே உள்ள சோ்வாம்பாளையம் பகுதியில் குலதெய்வ கோயிலில் உடைக்கப்பட்டுள்ள சுவாமி சிலைகள்.

இதையடுத்து போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடி கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். ற்கெனவே இக்கோயிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.