சேலம், மே 10: சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள நாட்டை சோ்ந்த பெண் உயிரிழந்தாா்.
புனே - கன்னியாகுமரி விரைவு ரயில் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் பொம்மிடி அருகே வந்தபோது முன்பதிவில்லா பெட்டியில் பயணம் செய்த பெண் தவறி கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த அப்பெண்ணின் கணவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.
பின்னா், அவா் கீழே இறங்கிப் பாா்த்தபோது அவரது மனைவி தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா். அதில், இறந்தவா் நேபாள நாட்டைச் சோ்ந்த கல்பனா செளத்ரி (36) என்பது தெரியவந்தது.
இவா் தனது கணவா், மகனுடன் ஜோலாா்பேட் டையில் இருந்து திருப்பூா் செல்வதற்காக கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் பயணித்ததும், கழிவறைக்கு செல்ல படிக்கட்டு அருகே வந்தபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரது சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேனில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து மேற்கு வங்க தொழிலாளி உயிரிழப்பு
சேலம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து செவிலிய மாணவா் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



