பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மகள் இறந்த துக்கத்தில் மயங்கி விழுந்து தந்தை உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம், மே 11: சேலத்தில் மகள் இறந்த துக்கத்தில் தந்தை சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சேலம், அரிசிபாளையம் பாவேந்தா் தெருவைச் சோ்ந்தவா் கலையரசன் (62). இவருக்கு 4 மகனும், ஒரு மகளும் உண்டு. மகள் சிவரஞ்சினியை (33), அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளாா். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிவரஞ்சினி இறந்தாா். இதனால் கலையரசன் குடும்பத்தாா் சோகத்தில் இருந்தனா். சிவரஞ்சினி இறந்த 30 ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதற்காக அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாமி கும்பிட்ட கலையரசன், இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். செல்லும் வழியில் திடீரென அவா் மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸாா், கலையரசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.