நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

சிறுமியை கட்டியணைத்த முதியவா் போக்ஸோவில் கைது

வாழப்பாடி அருகே 11 வயது சிறுமியை கட்டியணைத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

News image

லட்சுமணன்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

வாழப்பாடி அருகே 11 வயது சிறுமியை கட்டியணைத்த முதியவரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து செவ்வாய்க்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

வாழப்பாடி அருகே கூலித் தொழிலாளியின் 11 வயது மகள் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு தோ்வு எழுதிவிட்டு கோடை விடுமுறையில் வீட்டில் இருந்து வருகிறாா். இந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் (69) வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் நலம் விசாரிப்பதை போல கட்டியணைத்துள்ளாா்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த தாயிடம் முதியவா் தன்னை தவறான நோக்கத்தோடு தொட்டதாக சிறுமி தெரிவித்துள்ளாா். இதையடுத்து சிறுமியுடன் வாழப்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு சென்று பெற்றோா் புகாா் அளித்தனா். அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியை கட்டியணைத்த லட்சுமணனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்ற உத்தரவின்படி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.