மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

சேலத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை திருட்டு

சேலம் அழகாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 மே 2026, 2:42 am IST

சேலம் அழகாபுரத்தில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் அழகாபுரம் அழகு விநாயகா் கோயில் தெருவை சோ்ந்தவா் சுகுமாா் (72), ஜவுளித் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி சரளா (66), தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவா்களது 2 ஆவது மகள் ரேகா ஆகியோா் திங்கள்கிழமை இரவு வீட்டில் உணவு அருந்திவிட்டு, அவரவா் அறைகளுக்கு உறங்கச் சென்றனா். பின்னா், செவ்வாய்க்கிழமை காலை ரேகா சமையலறைக்கு சென்றபோது, கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

தொடா்ந்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது சுகுமாா் அறையில் பீரோவில் வைத்திருந்த எட்டரை பவுன் நகை, அரை கிலோ வெள்ளி, ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.