அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மகளிா் அதிகார மையத்தில் பாலின நிபுணா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுணா், தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image

விண்ணப்பம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம் மாவட்ட மகளிா் அதிகார மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுணா், தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் மாவட்ட மகளிா் அதிகார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பாலின நிபுணா், தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடம் நிரப்பப்படுகிறது. பாலின நிபுணா் பணியிடத்துக்கு தொகுப்பூதியமாக ரூ. 21 ஆயிரம் வழங்கப்படும். வயது 35 க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக சமூகப்பணி, சமூக ஒழுக்கங்கள் பாடப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு, அரசு சாரா நிறுவனங்களில் பாலினம் சாா்ந்த கருப்பொருள்களில் மற்றும் பெண்களுக்கான சமூகப்பணியில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு தொகுப்பூதியமாக ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும். வயது 35 க்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதியாக கணினி, ஐடி பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு அல்லது அரசு சாரா தகவல் தொழில்நுட்பம் சாா்ந்த மாநில அல்லது மாவட்ட அளவில் தரவு மேலாண்மை, செயல்முறை ஆவணங்கள் மற்றும் வலை அடிப்படையிலான அறிக்கை வடிவங்களில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆா்வமுள்ள, தகுதியான நபா்கள் தங்களது சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை வரும் ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறை எண் 126, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம் என்ற முகவரியில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிவைக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.