மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவமான சஷாஸ்த்ரா சீமா பால்(எஸ்எஸ்பி) பிரிவில் நிரப்பப்பட உள்ள 827 காவலர் குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்கள் இருபாலர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 524/RC/SSB/Combined Advt/CT to SI (Non-GD/2026)
மொத்த காலியிடங்கள்: 827
பணி மற்றும் இதர விவரங்கள் குறித்து பார்ப்போம்.
பணி: Constable (Veterinary)- 34
பணி: Constable (Driver) only for male – 553
பணி: Constable (Gardener) - 41
பணி: Constable (Water Carrier) - 5
பணி: Constable (Cobbler) - 25
பணி: Constable (Tailor) - 41
பணி: Constable (Washerman) - 74
பணி: Constable (Barber) - 43
பணி: Constable (Waiter) - 3
பணி: Constable (Carpenter) - 7
பணி: Constable (Nursing Orderly) - 1
சம்பளம் : மாதம் ரூ.21,700 - ரூ.69,100
தகுதிகள்:
I. Veterinary பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று கால்நடை மருத்துவமனையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
II. Driver பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். Driver இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
III. Nursing Orderly பணிக்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Red Cross Society அங்கீகாரம் பெற்ற முதலுதவிச் சான்று மற்றும் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
IV. இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முத்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: Veterinary, Driver, Nursing Orderly பணிகளுக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். Carpenter பணிக்கு 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுக்கை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : எஸ்எஸ்பி -ஆல் நடத்தப்படும் ஆன்லைன்வழி எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் பத்தாம் வகுப்பு தகுதி அடிப்படையில் இருக்கும். கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அமைந்திருக்கும். எழுத்துத்தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களும் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
உடற்திறன் தேர்வு: ஆண்கள் 4.8 கி.மீ. தூரத்தை 24 நிமிடங்களிலும், பெண்கள் 2.4 கி.மீ. தூரத்தை 18 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும்.
உடற்தகுதித் தேர்வில் விண்ணப்பதாரரின் உயரம், உடல்எடை பரிசோதிக்கப்படும். உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.
Driver/Veterinary பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் 170 செ.மீ. உயரமும், பெண்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும். Nursing Orderly பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் 165 செ.மீ உயரமும், பெண்கள் 155 செ.மீ. உயரமும் பெற்றிருக்க வேண்டும். இதர பணிகளுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் 167.5 செ.மீ. உயரமும், பெண்கள் செ.மீ. உயரமும் பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் சாதாரண நிலையில் 80 செ.மீ. அகலமும், 5 செ.மீ. சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி, இஎஸ்எம் பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர அனைத்து பிரிவினரும் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.ssb.gov.in என்ற இணையதளம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 4.5.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
Summary
Sashastra Seema Bal latest official recruitment notification for 827 Constable Posts.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய ரிசர்வ் காவல் படையில் 9197 காவலர் பணியிடங்கள்!

மெட்ரோ ரயில்வேயில் உதவி மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

துணை ராணுவத்தில் 223 தலைமை காவலர் பணியிடங்கள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

விண்ணப்பிக்கலாம் வாங்க... பால்மர் லேவையர் நிறுவனத்தில் இளநிலை அலுவலர் பணி!
வீடியோக்கள்

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு



