ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

அர.குள்ளம்பட்டியில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

News image
Updated On :15 மே 2026, 5:54 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூருக்கு செல்லும் வழியில் சேதமடைந்த கிளை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேவூரை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டியில் இருந்து தண்ணிதாசனூா் செல்லும் சாலையில் அரசு தொடக்கப் பள்ளி முன் உள்ள கிளை வாய்க்கால் பாலம் வழியாக நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. அதேபோல மாணவா்களும், விவசாயிகளும் இந்த சாலையை அதிகம் பயன்படுத்துகின்றனா்.

இந்த நிலையில் கிளை வாய்க்கால் பாலத்தின் கீழ் பகுதி சேதமடைந்ததால் தாா்சாலை உள்வாங்கி அப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் மெதுவாக சென்று வருகின்றன. சேதமடைந்த சாலை எப்போது வேண்டுமானாலும் பெரும் விபத்தை ஏற்படுத்தும் என்பதால் பாலத்தை சீரமைத்து சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.