இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சித்தப்பா போக்ஸோவில் கைது

News image

சித்திரிப்பு

Updated On :15 மே 2026, 5:54 am IST

ஆத்தூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அவரது சித்தப்பாவை போலீஸாா் போக்ஸோவில் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆத்தூா் அருகே மதுப் பழக்கத்துக்கு அடிமையானதால் கணவரை பிரிந்து சென்ற மனைவி, கடந்த 3 ஆண்டுகளாக தங்கையின் வீட்டில் வசித்து வருகிறாா். இந்த நிலையில் அவரது 16 வயது மகளை வீட்டில் இருந்த தங்கையின் கணவா் நந்தகுமாா் (38) பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட சிறுமி, கா்ப்பமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்த சிறுமி தெரிவித்த தகவலின்பேரில் போலீஸாா் நந்தகுமாரை போக்ஸோவில் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.